சிறு தானிய வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த தானியமாக கருதப்படுவது சாமை அரிசி (Panicum sumatrense) . சாமை அரிசி இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்படும் சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஆங்கிலத்தில் ‘Little Millet’ என அழைக்கப்படுகிறது. இந்த தானியம் உயரமாக 1 மீட்டர் வரை வளரக்கூடியது.
மேலும் சாமை அரிசி சங்ககால மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக பண்டைய தமிழர்களின் கல்வெட்டுகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. தற்போது இது பரவலாக இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மேற்கு மியன்மார் ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது.
சாமை அரிசி இந்தியாவில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Tamil : சாமை
Hindi: Kutki, Shavan.
Bengali : Sama.
Gujarati : Gajro, Kuri.
Telugu : Samalu (సామలు).
Marathi : Sava, Halvi, Vari.
Oriya : Suan.
Kannada : Saame (ಸಾಮೆ).
Malayalam : Chama (ചാമ)
Also read: செவ்வாழை பயன்கள்
சாமை அரிசியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
சாமை அரிசியில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், துத்தநாகம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.
சாமை அரிசி ஊட்டச்சத்து விவரம்
கார்போஹைட்ரேட்டுகள் (கிராம்): 67.0
புரதம் (கிராம்): 7.7
கொழுப்பு (கிராம்): 4.7
ஆற்றல் (KCal) : 341
கச்சா இழை (கிராம்): 7.6
கால்சியம் (மிகி) : 17
பாஸ்பரஸ் (மிகி) : 220
இரும்பு (மிகி) : 9.3
சாமை அரிசி பயன்கள்
1.உடலுக்கு வலிமை தரும்
சாமை அரிசியில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலுப்பெறுகின்றன. மேலும் சாமை உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.
2.சாமை உடலின் எடையை குறைக்கிறது
திணைகளின் கலோரி பொதுவாகவே குறைவாக இருக்கும். மேலும் அவை எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுப் பொருளாகும். சாமை அரிசி சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு உடனே கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ரொம்ப நேரம் பசி உணர்வையும் வராமல் தடுக்கிறது.
3.உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு புரதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சாமையில் 7.7 கிராம் புரதம் உள்ளது உள்ளது.
4.விந்து உற்பத்தி அதிகரிக்கும்
சாமை அரிசியில் தாது பொருட்கள் ஏராளமாக உள்ளதால் ஆண்களின் ஆண்மை பெருகி விந்தணு உற்பத்திக்கும் ஆண்மை தன்மையை கூட்டுவதற்கும் பெரிதும் உதவுகிறது. சாமை அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
5.இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்
சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். இதனால் இரத்த சோகை நோய் வராமல் தடுக்கப்படுகிறது. உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் சாமை மிகவும் இன்றியமையாதது.
6.சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்
அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முக்கிய பங்கு வகிப்பது நார்ச்சத்து. இதனை உணவாக உட்கொள்ளும் போது சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும், மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமல் தடுத்திடும்.
7. சாமை மலச்சிக்கலை போக்கும்
சாமை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் நமக்கு மலச்சிக்கல் வராமல் நிரந்தரமாக தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
8. எலும்பு உறுதிக்கு சாமை அரிசி
சாமையில் உள்ள இயற்கையான சுண்ணாம்பு அல்லது கால்சியம் சத்து எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகள் வலிமை பெறவும் உதவுகிறது.
9.குழந்தைகளுக்கு ஏற்றது
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்களிலிருந்து சாமை அரிசி விடுதலை அளிக்கிறது. மேலும், இதில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் கருவிலேயே உருவாகாமல் தடுக்கும் சக்தி கொண்டது..
10.மாரடைப்பு வராமல் தடுக்கும்
சாமையில் உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் அடங்கியுள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து, மாரடைப்பு போன்ற நோய்களை வராமல் தடுக்கிறது.
Also Read: கரும்பு ஜூஸ் பயன்கள், திரிபலா சூரணம் பயன்கள், கத்தரிக்காயின் நன்மைகள், கேரட்டின் பயன்கள், உலர் திராட்சை பயன்கள்