மத்தி மீன் பயன்கள்

மத்தி மீன் பயன்கள்

மத்தி மீன்கள்(sardines) பல நூற்றாண்டுகளாக  நமது பாரம்பரிய உணவில் இரண்டறக் கலந்து உள்ளது உள்ளது. இந்த சிறிய வகை மீன்கள் இத்தாலியில் உள்ள சர்டினியா தீவின் பெயரால்   அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை  அங்குதான் ஏராளமாக காணப்படுகின்றன. 

ஏழைகளின் உணவு மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

மத்தி மீன்கள் மிகவும் விரைவாக அழுகக் கூடிய ஒரு வகை மீன் இனமாகும். எனவே வாங்கியவுடன் சமைப்பது நல்லது.அட்லாண்டிக், பசிபிக் மற்றும் மத்தியதரைக் கடல்களில் மத்தி மீன்கள் ஏராளமாக உள்ளன.

மத்தி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் ஊட்டச்சத்து நன்மைகள்.

மத்தி மீன் பயன்கள்

இந்த மத்தி மீன்கள்  பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை பல  நோய்களிலிருந்து நம்மை தடுத்து நமது உடலை பாதுகாக்கின்றது. இந்த ஊட்டச்சத்துக்கள்  நமக்கு இதயம் சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்க உதவுகின்றன. 

 மத்தி மீன் சில நேரங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.  ஏனெனில் அவற்றில் கால்சியம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  அது சிசு வளர்ச்சிக்கும் எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு  வகிக்கிறது.

செவ்வாழை பயன்கள்

1.ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன, ஏனெனில் அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய நோய் வராமல் தடுக்கும் பண்புடையது.  மத்தி மீன் ஒமேகா-3 அமிலத்தின் மிகச்சிறந்த ஒரு மூலமாகும்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இரத்த உறைவு அபாயத்தையும் குறைக்கின்றன. மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. 

2.மத்தி மீனில் வைட்டமின்கள்  ஏராளம்

மத்தி மீனில் வைட்டமின் பி-12  அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின்  நமது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும்  நமக்கு கூடுதல் ஆற்றலை அளிக்கிறது.

கூடுதலாக, இந்த மீன்களில் வைட்டமின் டி-யும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

3. எலும்புகளின் வளர்ச்சிக்கு மத்தி மீன்

மத்தி மீன் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள், பால் பொருட்களுக்கு ஒவ்வாமை அல்லது அவர்களின் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

 கர்ப்பிணி பெண்கள் மத்தி மீன் எடுத்துக் கொள்ளும் போது கர்ப்ப காலத்தில் உள்ள சிசுவுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும். 

4.  மத்தி மீன் தாதுக்கள் மற்றும் கனிமங்கள்  ஏராளம்

கால்சியம் மற்றும் நிறைய வைட்டமின்களுடன்,  மத்தி மீனில் பல பயனுள்ள தாதுக்கள் உள்ளன.  அவையான:

  • நியாசின்
  • இரும்பு
  • பொட்டாசியம்
  • zinc
  • பாஸ்பரஸ்

5. புரதம்

மத்தி மீனில் புரதம் உள்ளது, இது ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகள் உருவாக்குவதற்கு அவசியம்.

மத்தி மீனை எப்படி சாப்பிடுவது

டின்னில் அடைக்கப்பட்ட மத்தியை வாங்கினால், சோயாபீன் எண்ணெயை விட ஆலிவ் எண்ணெயில் பேக் செய்யப்பட்ட மத்தியை வாங்குவது நல்லது. 

நீங்கள்  மத்தி மீனை வாங்கப் போகும் போது, முதலில் அவற்றை பரிசோதிக்க மறக்காதீர்கள்.  பிரஷ் மத்திமீனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:

  • புதிய வாசனை
  • ஒளிரும் தோல்
  • ஒளிரும் கண்கள்
  • உறுதியான அமைப்பு

Also Read: கத்தரிக்காயின் நன்மைகள்கேரட்டின் பயன்கள்உலர் திராட்சை பயன்கள்

Leave a Comment