உலர் திராட்சை பயன்கள்

உலர் திராட்சை பயன்கள்

உலர் திராட்சை என்பது வெயிலில் காயவைத்து பதப்படுத்தப்பட்ட திராட்சை  பழங்களே ஆகும்.

உலர் திராட்சையில் இயற்கையாகவே இனிப்பு சர்க்கரை மற்றும் கலோரிகள்  கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் அவற்றை கொஞ்சமாக சாப்பிட்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.  உலர் திராட்சைகள்  நமக்கு பல வகைகளில் உதவி புரிகின்றன.  அவை செரிமானத்திற்கு உதவுகின்றன,  உடலின் இரும்பு தாது அளவை அதிகரிக்கின்றன மற்றும்  நமது எலும்புகளை வலுவாக்குகின்றன.  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல உலர் திராட்சைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் ஆற்றல் மிக்க நார்ச்சத்து  நிறைந்த, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு ஒப்பற்ற உணவாகும்.   எனவே தான் கருப்பு உலர் திராட்சை  “இயற்கையின் மிட்டாய்”  என்று  அழைக்கப்படுகின்றன.

கருப்பு உலர் திராட்சை பயன்கள்

1.நன்றாக மலம் கழிக்க

 உலர் திராட்சைகளில் கரையாத நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.  அதனால் அவை இயற்கையான மலமிளக்கியாக  மாறி, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.  மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்கள் உலர் திராட்சையை பயன்படுத்தி பயன் பெறலாம்.

2.உலர் திராட்சை உடல் எடை அதிகரிக்க  செய்யும்

 நாம் எல்லோரும் உடல் எடையை குறைக்க விரும்புவதில்லை.  சிலர் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களும் உள்ளனர்.  அவர்கள் உலர் திராட்சைக்கி நன்றி சொல்லலாம்.  ஏனென்றால் உலர் திராட்சைப் பழத்தில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்துள்ளது. அவை உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்காமல், எடை அதிகரிக்க உதவி செய்யும்.

3.புற்றுநோய் தடுப்பு

கேடசின்கள் இருப்பதால்,  உலர் திராட்சைகள்  புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகின்றன. கேட்டசின்களில்  உள்ள பாலிஃபீனால்  ஆண்டி ஆக்ஸிடண்ட்  புற்றுநோய்க்கு எதிராக  போராடும்.

4. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

உலர் திராட்சையில் அதிக பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் ஒரு இயற்கையான  தளர்ச்சி அடைய செய்யும்  ஒரு கனிமம் ஆகும். இது நமது இரத்த நாளங்களை தளர்த்துகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் உயர் இரத்த அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

5.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

கோவிட் நோயினால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நோய் எதிர்ப்பு சக்தி மிக முக்கியமானதாக மாறியுள்ளது.  உலர் திராட்சைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பாலிபினால்கள் போன்ற பிற சேர்மங்கள் உள்ளன.

இவை அனைத்தும் நமது அமைப்பில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடவும், அவற்றை உறுதிப்படுத்தவும், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் முதுகெலும்பாக இருக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் உட்பட நமது செல்களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்கவும் உதவுகின்றன.

 உலர் திராட்சையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை பல்வேறு நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

Also Read: கத்தரிக்காயின் நன்மைகள்

6.அழற்சி எதிர்ப்பு

 Arthritis எலும்பு வாதம் போன்ற அழற்சி பிரச்சனைகளால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் வழங்க  உலர் திராட்சை உதவுகிறது

7. நன்றாக தூக்கம் வர உலர் திராட்சையை சாப்பிடுங்கள்

 உலர் திராட்சையில் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால், தூக்கமின்மைக்கு சிகிச்சையளிப்பதில்  உலர் திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நாம் அனைவரும் அறிந்த படி, இரும்பு ஒரு முக்கிய கனிமமாகும், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது, ஆக்சிஜனைக் கொண்டு செல்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் சிறந்த தூக்கத்தை உறுதி செய்கிறது.

8. உலர் திராட்சை ஆண்மை

உலர் திராட்சை அடிக்கடி சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஆண்மை அதிகம் ஆகிறது.  இதனால் பாலுணர்வை மேம்படுத்துகிறது. அவற்றில்   உள்ளஅர்ஜினைன் என்ற புரதம் விந்தணு இயக்கத்திற்கு உதவுகிறது மற்றும் விறைப்புத்தன்மைக்கு உதவி செய்கிறது. மேலும்  படுக்கை அறைக்கு தேவையான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.

9. இரத்த சோகையைத் தடுக்கிறது

நமது உடலில் இரத்த சிவப்பணுக்கள் உருவாக இரும்பு மிகவும் அவசியமான  ஒரு தாது.  உலர் திராட்சையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, மேலும் அவை உடலில் இரத்த விநியோகத்தை அதிகரிக்க உதவுகின்றன, இதனால்  உலர் திராட்சை இரத்த சோகையைத் தடுக்கிறது. 

உலர் திராட்சை எப்படி சாப்பிட வேண்டும் ?

உலர் திராட்சையை  நம்மில் பெரும்பான்மையோர் அப்படியே சாப்பிட ஆசைப்படுவார்கள்.  அவற்றை அப்படியே சாப்பிடலாம். ஆனால் அவற்றை   இரவில் ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு கூடுதல் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

 உலர் திராட்சையை இரவில் நீரில் ஊற வைப்பதால் வைட்டமின்கள் மற்றும் அதன் வெளிப்புற தோலில் உள்ள தாதுக்கள் கரைந்து போகும். இதனால் ஊட்டச்சத்துக்கள்  நமது உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

 உலர் திராட்சையுடன் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டால் குடலில் ஏற்படும்  உபாதைகளை குறைக்கவும், ஈறுகளை ஆரோக்கியமாகவும், எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.

உலர் திராட்சை ஒரு நாளைக்கு எவ்வளவு

 உலர் திராட்சையில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் இனிப்பு இருப்பதால் ஒரு நாளைக்கு அரை கப் அளவு சாப்பிடுவது நன்மை பயக்கும்.  ஆனால் இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும் எனவே உங்கள் மருத்துவரை அணுகி எவ்வளவு சாப்பிடலாம் என்று அவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். 

உலர் திராட்சை சளி பிடிக்குமா

காய்ச்சல் போன்ற வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் மற்றும் சாதாரண சளி   வராமல் உலர் திராட்சை தடுக்கிறது . உலர் திராட்சை ஒரு இயற்கையான இருமல் அடக்கி. மற்ற இருமல் நிவாரண மாத்திரைகளுக்கு பதிலாக திராட்சையை மென்று சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

கேரட்டின் பயன்கள்

Leave a Comment