பளபளப்பான முடி, கூந்தலுக்கு விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் முடி பயன்கள்

ஆமணக்குச் செடியில் இருந்து கிடைக்கும் இந்த விளக்கினை மிகவும் அடர்த்தியாக இருக்கும் பிசுபிசுவென்று இருக்கும் ஒரு எண்ணெய். விளக்கெண்ணெய் ஒரு மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் விளக்கெண்ணையை அடிக்கடி உபயோகிக்கிறதை நாம் காணலாம். 

 இது மட்டும் இல்லாது விளக்கெண்ணெய்  காலங்காலமாக முடியின் ஆரோக்கியத்திற்கும் முடி வளர்ச்சிக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.  சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் விளக்கெண்ணெய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

விளக்கெண்ணையை தலைக்கு யூஸ் பண்ணலாமா அது முடி கொட்டுவதை தடுக்குமா என்ற பல கேள்விகளுக்கு இங்கு பதில் சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் சீரான இடைவெளியில் விளக்கெண்ணையை யூஸ் பண்ணும் போது அது உங்களின் முடி வளர்ச்சிக்கு பெரும் உதவி புரிகிறது. மேலும் முடி உதிர்வு பொடுகு போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்கிறது.

விளக்கெண்ணெய் முடி பயன்கள்

1.விளக்கெண்ணெய் உங்கள்  முடிகளில் உள்ள ஈரப்பதத்தை காக்கிறது.

 உங்கள் தலை மற்றும் தலைமுடி வறண்டு போவதால் உங்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படலாம். ஆனால் விளக்கெண்ணெய் அந்த தொந்தரவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.  விளக்கெண்ணெய் உங்கள் முடிவில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாக்கிறது.  விளக்கெண்ணையில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது முடியை ஈரப்பதத்துடன் பலப்படுத்துகிறது. 

2.ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியை விளக்கெண்ணெய் தருகிறது

 விளக்கெண்ணெய் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும் இயற்கையான கண்டிஷனர் ஆகும். இந்த எண்ணெயில் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் உள்ளன. இந்த எண்ணெய் மசாஜ் செய்யும் போது, முடி வேர்க் கால்களில்  ​​இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. விளக்கெண்ணெய் மென்மையாக்கும் பண்புகளை கொண்டு உள்ளதால் சேதமடைந்த வறண்ட கூந்தலுக்கு மிகவும் ஏற்றது

3.விளக்கெண்ணெய் நோய்த் தொற்றில் இருந்து தலை முடியை பாதுகாக்கிறது

மழை மற்றும் குளிர் காலத்தில் உச்சந்தலையில் தொற்று ஏற்படுவது பொதுவானது. தலையை நீங்கள் சரிவர கழுவவில்லை என்றால் பொடுகு, அரிப்பு, வெடிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தும். உச்சந்தலையில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். .

 விளக்கெண்ணெய் அத்தகைய நோய்த் தொற்றில் இருந்து உங்கள் தலையையும் முடியையும் பாதுகாக்கிறது.  ஏனென்றால் விளக்கெண்ணையில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் வைரஸ் வைரஸை எதிர்த்து போராடும் பல  காரணிகள் உள்ளன.

4.விளக்கெண்ணையில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது

 வைட்டமின் ஈ ஆனது தேகத்திற்கும் முடிக்கும் மிகுந்த பயன் அளிக்கக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும். இந்த வைட்டமின் ஈ விளக்கெண்ணெயில் நிறைந்து காணப்படுகிறது.  நீங்கள் வாரம் ஒரு முறை விளக்கெண்ணையை வைத்து தலைக்கு மசாஜ் செய்யும் போது வைட்டமின் ஈ உங்கள் முடிக்கு தாராளமாக கிடைக்கிறது.  இதனால் உங்கள் முடி உதிராமலும் உடையாமலும் ரொம்ப நேர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாறும்.

5.கருகருவென உங்கள் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்

 உங்கள் கூந்தல் ஒட்டுமொத்த நிலையும் உங்கள் கூந்தலில் உள்ள மயிர் கால்கள் தான் தீர்மானிக்கின்றன. மோசமான சுகாதாரம் மற்றும் தொற்று போன்றவைகளால் உங்கள் மயிர் கால்கள் சேதம் அடையலாம்.. உங்களுக்கு உச்சந்தலையில் வறட்சி இருந்தால், தினமும் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது அவசியம்.  மசாஜ் செய்யும் போது விளக்கெண்ணையை சிறிது சூடேற்றி விட்டு அதற்கு அப்புறம் மசாஜ் செய்யவும். 

விளக்கெண்ணெயின் மற்றைய பயன்கள்

  • விளக்கெண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைசர்  ஆக பயன்படுகிறது.
  • விளக்கெண்ணெய் மலச்சிக்கலை  குணப்படுத்துகிறது.
  •  வெட்டுக்காயம் போன்ற இடத்தில் நோய் தொற்று வராமல் தடுக்கிறது.
  • முகப்பருவை குறைக்கிறது
  •  தோல் சுருக்கங்களை நீக்கி தோலை பளபள என்று   ஆக்குகிறது.

விளக்கெண்ணெய் பயன்படுத்தும் முறை

 விளக்கெண்ணெய் பெரும்பாலான நேரங்களில் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும் சில நேரங்களில் விளக்கெண்ணெய் தீமைகள்  கூட செய்யலாம்.  நீங்கள் எதற்கும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 விளக்கெண்ணெயின் மனம் பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லை. எனவே விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய்  சம அளவு சேர்த்து தடவினால் அந்த வாசனை போய்விடும்.

பெரும்பாலான எண்ணெய்களைப் போலவே, ஆமணக்கு  அல்லது விளக்கெண்ணெய் இறுதியில் கெட்டுப்போகும், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் பாட்டிலின் காலாவதி தேதியைச் சரிபார்க்கவும்.

 விளக்கெண்ணெய் துணிகளில் பட்டால் அது கரைகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் விளக்கெண்ணெய் உபயோகிக்கும் போது உங்கள் துணிகளில் படாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

உங்கள் தலைமுடியில் இருந்து நீங்கள் விளக்கெண்ணையை அகற்ற, நீங்கள் பல முறை ஷாம்பு செய்ய வேண்டியிருக்கும்.

 அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.  விளக்கெண்ணையில் பிசுபிசுப்பு தன்மையும் அடர்த்தியும் அதிகமாக இருப்பதால் விளக்கெண்ணையை தினசரி உபயோகிப்பவர்கள் முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஆளாகலாம்.  எனவே வாரத்திற்கு ஒருமுறை விளக்கெண்ணையை தலையில் மசாஜ் செய்தால் அதிகப்படியான பலன்களை பெறலாம்.  உங்களுக்கு ஏதும் குழப்பம் இருந்தால் அருகில் இருக்கும் தோல் மருத்துவர் இடம் நீங்கள் பேசிக் கொள்ளலாம்.

மேலும் வாசிக்க: உலர் திராட்சை பயன்கள், கேரட்டின் பயன்கள்

Leave a Comment