தூதுவளை பயன்கள்

தூதுவளை பயன்கள்

தூதுவளை (Solanum trilobatum) பழங்காலத்திலிருந்தே மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான தாவரமாகும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளில் இது ஒரு பிரபலமான மருத்துவ தாவரமாகும்.

தமிழ் சித்த மருத்துவத்தில் தூதுவளை காயகற்ப மூலிகைகளில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தூதுவளையின் இலை தண்டு வேர் மற்றும் பழம் இப்படி அனைத்துமே பயனளிக்கக் கூடியவை.

தூதுவளையின் இலை சட்னிகள், கறிகள் மற்றும் ரசம்  செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தூதுவளை மூலிகை செடியில் முட்கள் நிறைந்து இருக்கும்.  இலைகளுக்கு அடியிலும் சில சமயங்களில் பழங்களுக்கு அடியிலும்  முட்களை காணலாம்.  தூதுவளையின்  பூக்கள் கவர்ச்சிகரமான ஊதா-வயலட்  நிறங்களை கொண்டிருக்கும்.

தூதுவளையின் இலைகள் முக்கோணமாகவும், ஒழுங்கற்ற மடல்களாகவும் இருக்கும். பழங்கள் சிறியது, கோள வடிவமானது மற்றும் பல சிறிய விதைகளைக் கொண்டுள்ளது. அவை வெளிர் பச்சை நிறத்தில் வந்து பழுத்தவுடன் சிவப்பு நிறமாக மாறும்.

 தூதுவளையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது.  தூதுவளை  பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையில்  இருமல், ஆஸ்துமா, சோர்வு, சுவாச நோய் மற்றும் தோல்  நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தூதுவளை பயன்கள்

1.ஆஸ்துமா

ஆஸ்துமா நோய்க்கு தூதுவளை பழங்காலத்திலிருந்தே  உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.  தூதுவளை பல்வேறு சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒரு மருந்தாக பல இயற்கை மருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியில்  தூதுவளை ஆஸ்துமா நோயாளிகளில் நுரையீரல் செயல்பாடுகளின்  அளவினை மேம்படுத்தியதை காட்டியது. 

2.வலி நிவாரணி பண்புகள்

தூதுவளையின் வேரிலிருந்து பெறப்படும் சாறு சிறந்த வலி நிவாரணி பண்புகளைக் கொண்டு இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

3.உடல் வலிமை

தூதுவளையில்  நெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நமது உடல் வலிமை குறிப்பிட்டதற்கு முன்னேற்றத்தை அடையும்.  இதற்கு காரணம் தூதுவளையில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்து காணப்படுகிறது.  இது நமது எலும்பு மற்றும் எலும்பு சேரும் பகுதிகளை பலப்படுத்தும். 

4.ஆண்மையை அதிகரிக்கும்

தூதுவளை இலையை நன்கு கழுவி அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.  மேலும் தூதுவளை பூ ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும். 

5.சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து விடுதலை

தூதுவளை இலையை கஷாயம் செய்து அதனுடன் ஒரு கிராம் திப்பிலி பொடியை சேர்த்து தூதுவளை சூப் பருகி வர நாள்பட்ட சளி மற்றும் தொண்டை வழியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.  தூதுவளை மலச்சிக்கலை  ஏற்படுத்தலாம் என்பதால் அதனுடன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

6.அழற்சி எதிர்ப்பு பண்புகள்

தூதுவளையின் இலை மற்றும் வேர் கடுமையான மற்றும் நாள்பட்ட அழற்சி  இரண்டுக்கும் எதிராக அழற்சி எதிர்ப்பு செயல்பாடு உள்ளது.  இந்த தாவரத்தின் வேர் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

7.நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுதலை 

இன்றைய காலகட்டத்தில் பல ஆண்கள் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தூதுவளை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  வாரம் மூன்று முறை தூதுவளையை சமையலில் சேர்த்துக் கொண்டால் நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுதலை அடையலாம்.

பல தனிம மற்றும் உலோக நச்சுத்தன்மை  கொண்ட உணவு பொருட்கள் சந்தையில் இப்போது அதிக அளவில் உள்ளன. இவை நாளடைவில் தீவிர நரம்பியல் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தலாம். தூதுவளை இந்த உலோக நச்சுத்தன்மைக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது .

8.நீரிழிவு எதிர்ப்பு

தூதுவளை இலை சாறு கொடுத்து நடத்தப்பட்ட நீரிழிவு சிகிச்சையானது இரத்த குளுக்கோஸ் அளவுகள், யூரியா, புரதம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பைக் காட்டியது. .

9.கொசுக்களிடம் இருந்து விடுதலை

 தூதுவளை ஒரு சிறந்த இயற்கை கொசு விரட்டியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தூதுவளை சாற்றை நம் கை கால்களில் தடவினால் கொசுக்கடியில் இருந்து நாம் முழுமையாக விடுதலை பெறலாம்.

தூதுவளை தீமைகள் 

தூதுவளை இலைகள் அல்லது பழங்களைப் பறிக்கும் போது கவனமாக இருக்கவும்.  ஏனென்றால்  தூதுவளை செடி முழுவதும் முட்களால் மூடப்பட்டிருக்கும்.

மேலும், இந்தச் செடியின் இலைகளைப் பயன்படுத்தி சமையல் அல்லது மருந்து தயாரிக்கும் போது கவனமாக இருக்கவும். முட்கள் இருக்கும் பகுதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

ஆயுர்வேதத்தின்படி, தூதுவளையை உட்கொள்வதால் உடல் சூடு மற்றும் தாகம் அதிகரிக்கும். எனவே உடல் சூடு இருப்பவர்கள் தங்களது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

மேலும் வாசிக்க: உலர் திராட்சை பயன்கள், கேரட்டின் பயன்கள்

Leave a Comment