திரிபலா சூரணம் பயன்கள்

திரிபலா சூரணம் பயன்கள்

திரிபலா சூரணம் என்றால் என்ன?

கடுக்காய் (Terminalia chebula), தான்றிக்காய் (Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica officinalis) முறையே 1 : 2 : 3 என்ற விகிதத்தில் சேர்ந்த கலவையே, திரிபலா என்றழைக்கப்படுகிறது.  இந்த திரிபலா சூரணம் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவங்களிலும் மற்றும் நமது நாட்டில் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறைகளிலும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள்.

திரிபலா சூரணம் – வீட்டில் தயாரிக்கும் முறை

திரிபலா சூரணத்தை நாம் வீட்டில் எளிதாக தயாரிக்கலாம். நெல்லிக்காய் – 4 பங்கு, தான்றிக்காய் – 2 பங்கு, கடுக்காய் – 1 பங்கு  என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய், கடுக்காய் ஆகியவற்றின் விதைகளை நீக்கி பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் நிழலில்  நன்கு காயவைத்து அரைத்து பொடியாக்கவும்.

திரிபலா சூரணத்தை வீட்டிலேயே தயாரிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.  எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் திரிபலா சூரணம் பொடியாக கிடைக்கும். 

திரிபலா சூரணத்தை வருடம் முழுவதும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உரிய முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோடையில் நீருடனும், குளிர்காலத்தில் தேனுடனும், மழைக்காலங்களில் வெந்நீருடனும் கலந்து சாப்பிடவேண்டும்.

திரிபலா சூரணம் பயன்கள்

திரிபலா சூரணம் தொடர்ந்து சாப்பிட்டு வர நமக்கு பல வகைகளில் நன்மை  பயக்கிறது. துவர்ப்பு சுவையுடைய இந்த சூரணம்  நமது உடலில்  உள்ள வாதம், கபம், பித்தம் மூன்றால் வரும்  உபாதைகளை சரி செய்ய உதவுகிறது.

1.திரிபலா சூரணம்  வயிற்றுப்புண்ணை ஆற்றும்

திரிபலா சூரணத்தை நாம் தொடர்ந்து எடுத்து வர சாதாரண வாய்ப்புண் இருந்து வயிற்றுப்புண் வரை நமக்கு நிவாரணம் அளிக்கிறது.  திரிபலா சூரணம் நமது உடம்பில் உள்ள காயங்களை நீக்கி ரத்தப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது.  இதனால் நம் வாயில் உள்ள புண்கள் வயிற்றுப்புண் ஆகியவை விரைவாக குணமடைகின்றன.

2.திரிபலா சூரணம் மாதவிடாய்  உதிரப்போக்கை நிறுத்தும்

திரிபலாவில் உள்ள தாவர வேதிப்பொருட்கள் ரத்த சோகையும் இரத்தப்போக்கையும் நிறுத்தக்கூடிய சக்தி கொண்டவை. இதனால் வெட்டுக்காயம் மூலநோய் போன்றவற்றிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.  மேலும், பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக  அளவில் உதிரப்போக்கு இருந்தால் அதைக் கட்டுப்படுத்துவதற்கும்  திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.

3.திரிபலா சூரணம்  ஆண்மையை அதிகரிக்கும்

 ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்க தினமும் இரவில் திரிபலா சூரணத்தின் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.  சாப்பிட்ட பின் பசும்பால் குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து எண்ணிக்கை அதிகரித்து ஆண்மை அதிகரிக்கும்.

மேலும் வாசிக்க: பப்பாளி இலை நன்மைகள், நன்றாக தூங்க வேண்டுமா?

4.திரிபலா சூரணம் மாரடைப்பை தடுக்கும்

 திரிபலா சூரணம்  நமது ரத்தக் குழாய் சுருங்கி விரியக்கூடிய தன்மையை மேம்படுத்தி  இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.  இது மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு  உதவுகிறது.  மேலும்  திரிபலா சூரணத்தில் இரும்புச்சத்து, கால்சியம் சத்து, நுண் தாது உப்புகள் ஆகியவை கலந்து இருப்பதால் ஆரோக்கியமான உடல் இயக்கத்துக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

5.வாய் புண்ணிலிருந்து விடுதலை

திரிபலா சூரணத்தில் ஒரு  பூண் கிராம்பு மற்றும் ஒரு டஸ்பூன் கல் உப்பை  பொடி செய்து கலந்து பல்பொடியாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கலவையை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் ஈறுகளில் ரத்தக்கசிவு போன்றவை  நீங்கி பல் மற்றும் ஈறுகள் உறுதியாக இருக்கவும் உதவும்.

6.திரிபலா சூரணம் மலச்சிக்கலுக்கு ஒரு அருமையான மருந்து

மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு  ஸ்பூன் திரிபலா சூரணத்தைக் கலந்து, காலை நேரத்தில்  சாப்பிட்டு வந்தால் உடனே மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.  ஏனென்றால் திரிபலா சூரணம் மலத்தை இலக்கி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.

திரிபலா சூரணம் எப்படி சாப்பிடுவது

இப்படி பல வகைகளில் நமக்கு  நலம் பயக்கும் அற்புத சூரணமான திரிபலா சூரணத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று பலருக்கு குழப்பமாக இருக்கும். திரிபலா பொடியாகவும் மற்றும்  மாத்திரை ஆகவும் கிடைக்கிறது. இந்த பொடியை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். காலையில் சாப்பிட முடியாதவர்கள் இரவு படுக்கைக்கு முன்பு சாப்பிடலாம்.

திரிபலா சூரணம் யார் சாப்பிட கூடாது

திரிபலா சூரணத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள கூடாது. மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்களும் எடுத்துக் கொள்ள கூடாது. மேலும் சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என நினைப்பவர்கள் சித்த மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெற்றுக்  கொள்வது நல்லது. ஏதேனும் நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டு இருந்தால் ஒரு முறை சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்தலாம்.

திரிபலா சூரணம் பக்க விளைவுகள்

 திரிபலா சூரணத்தை சித்த மருத்துவரை அணுகி எப்படி சாப்பிட வேண்டும் என்று தெளிவாக கேட்டுக் கொள்வது நல்லது.  ஏனென்றால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக்கொண்டு இதை அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

மேலும் வாசிக்க: உலர் திராட்சை பயன்கள்கேரட்டின் பயன்கள், தூதுவளை பயன்கள்

Leave a Comment